இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இடையே இன்று 15 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே நேற்றையதினம் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இன்று மும்பை – அகமதாபாத் இடையேயான புல்லட் புகையிரத திட்டத்திற்கான அடிக்கல்லை மோடி மற்றும் அபே இருவரும் இணைந்து நாட்டினர்.
இதனைத் தொடர்ந்து கடற்படை, வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 15 ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும், ஷின்ஸோ அபேவும் கையெழுத்திட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே உறவு வலுப்படும் எனவும் இந்தியாவில் எளிதில் தொழில் தொடங்கும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.