161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆட்சியில் இருந்த ஜனாதிபதியின் உத்தரவினையே முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும், தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்டவும் பின்பற்றினர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அனுச பெல்பிட்டவோ அல்லது லலித் வீரதுங்கவோ சில் ஆடை கொள்வனவு செய்வதற்கான பணத்தை மோசடி செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஜனாதிபதியின் உத்தரவினை அமுல்படுத்தியமைக்காகவே இவர்கள் இருவரும் தண்டிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love