குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தானை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஓருவரை அதிகாரிகள் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைத்து வந்துள்ளனர். சமிம் பிக்ஷட் ( Samim Bigzad ) என்ற ஆப்கானிஸ்தான் இளைஞனையே நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைத்து வந்துள்ளனர்.
காபுலிற்கு குறித்த இளைஞனை திருப்பி அனுப்பவேண்டாம் என நீதிமன்றம் விடுத்த உத்தரவை பிரித்தானிய உள்துறை அமைச்சு செவிமடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலில் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை பின்பற்ற மறுத்த உள்துறை அமைச்சு பின்னர் இரண்டு நீதிமன்றங்கள் விடுத்த உத்தரவை தொடர்ந்து நாடு கடத்தப்பட்டவரை மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைத்து வந்துள்ளது.
டன்கன் லீவிஸ் என்ற சட்டஅமைப்பின் ஜேமி பெல் திணைக்களத்தின் நடவடிக்கைகள் முன்னர் ஓருபோதும் இடம்பெற்றிராதவை என தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளரை மீள அழைக்குமாறு நீதிபதி உத்தரவு
Sep 15, 2017 @ 03:11
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளரை மீள அழைக்குமாறு பிரித்தானிய உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் பிரித்தானியாவிலிருந்து ஆப்கானிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்பட்டிருந்தார். இவ்வாறு நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளரை மீள அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கம் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் செயற்பட்டுள்ளதாக நீதிபதி ஜேய் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பிரஜையான 22 வயதுடைய சமிம் பிக்ஷட் ( Samim Bigzad ) என்பவரே இவ்வாறு ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
சமிமை மீளவும் பிரித்தானியாவிற்கு அழைத்து வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவரை நாடு கடத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்ட நிலையில் அவர் நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.