182
யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களிடையே முதற்றடவையாக இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த 3.9.2017 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் ,தாதியர்கள் உள்ளிட்ட 1600 இற்க்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் 6 இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றன. Green Gladiators, Blue Blasters, Yellow Young Stars , Red Real Heroes , Violet Vikings and Maroon Mega Dreamers . ஆகிய இல்லங்களுக்கிடையே போட்டிகள் நடை பெற்றது.
இறுதி நாள் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சுகாதார அமைச்சின் தொற்ற நோய்கள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி திருமதி. சம்பிக்க விக்கிரமசிங்க்க அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்.
வட மாகாணத்தின் 1.2 மில்லியன் மக்களுக்கு வைத்திய சேவையை வழங்கி வரும் யாழ் போதனா வைத்தியசாலையானது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அபிவிருத்தியை நோக்கி முன்னோக்கிச் செல்கின்றது. 24 மணி நேரமும் மிகவும் சுசுறுப்பாக இயங்கி வரும் இவ்வைத்தியசாலையில் ஓய்வின்றி பணியாற்றும் உத்தியோகத்தர்களிடையே உற்சாகத்தையும் குழு மனப்பாங்கையும் இவ் விளையாட்டுப் போட்டியானது மேலும் வளர்த்தது . தங்களது குடும்ப நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள முடியாது தொடர்ச்சியா பணியாற்றிவரும் உத்தியோகத்தர்கள் பலர் தங்களது சகஉத்தியோகத்தர்களுடன் உரையாடுவதற்கும் இந்த விளையாட்டு நிகழ்வு வாய்ப்பு ஏற்படுத்தியது. விளையாட்டு ஆற்றல் உள்ள பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தமையை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த .சத்தியமூர்த்தி அவர்களது சிந்தனையில் உருவான இந்த நிகழ்வை யாழ் போதனா வைத்தியசாலை விளையாட்டு வைத்திய அலகின் தலைவர் வைத்திய நிபுணர் த . கோபிசங்கர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் இணைந்து சிறப்பாக ஒழுங்கு படுத்தி இருந்தனர் .
இலங்கை வரலாற்றில் ஒரு வைத்தியசாலை உத்தியோகத்தர்களிடையே விளையாட்டுப் போட்டி நடை பெற்றமை இதுவே முதற்றடவையாகும்.
வைத்திய சேவையில் தடங்கல் இன்றி ஏனைய பிரதேச வைத்திய சாலைகளில் பணியாற்றும் உத்தியோகதர்களின் உதவியுடன் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. மிகச் சிறந்த தடகள நெடுந்தூர ஓட்ட வீர வீராங்கனைகளும் , உதைபந்தாட்ட வீரர்களும் , பூப்பந்தாடட , கரப்பந்தாட்ட , வலைப்பந்தாடட , தாச்சி வீரர்களும் இங்கு பணியாற்றுகின்றனர். இவரகள் வைத்திய சேவைக்காக விடுமுறை இன்றி தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பின்றி சேவை புரிகின்றனர்.
பலர் தங்களது தனிப்பட்ட வாழ்வையே தியாகம் செய்து கடமை உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். இவர்களை உற்சாகப்படுத்தி உடல் உள ஆரோக்கியமுள்ளவர்களாக வாழவும் இவர்களது சேவையை மேலும் பெற்றுக்கொள்ளவும் இத்தகைய நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த .சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவிக்கின்றார்.
கடந்த ஆண்டு வைத்தியசாலை உத்தியோகதர்களிடையே சிறந்த பாடகர்களைத் தெரிவு செய்வதற்கான இனிய குரலுக்கான தேடல் போட்டி நடாத்தப்பட்டது. இவ் ஆண்டும் இது இனிய குரலுக்கான தேடல் 2 உத்தியோகதர்களிடையே ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
– அருணோதயன்
Spread the love