குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மூன்று இளைஞர்கள் மரணித்த சம்பவம் தொடர்பில் பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மூன்று பதின்ம வயதுடைய இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்தநிலையில் பிலிப்பைன்ஸின் தலைநகர் மனிலாவில் கடமையாற்றி வந்த அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களும் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மனிலாவைச் சேர்ந்த 1200 அதிகாரிகள் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் அரசாங்கம் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், காவல்துறையினர் அப்பாவி இளைஞர்களை கொலை செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.