ரஜிவ்காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட முறை குறித்த விசாரணை அறிக்கை 26 ஆண்டுகளுக்கு பின்னர் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து இந்திய மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது..
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கடந்த மாதம் இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் விசாரித்த உச்ச நீதிமன்றம், இது சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், சிபிஐ.க்கும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இந்த விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 19ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.