இந்தியாவில் சிறைகளில் இயற்கைக்கு மாறாக இறந்த கைதிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள 1,382 சிறைகளில் மனிதநேயமற்ற நிலை உள்ளதாக கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்த நிலையிலே நீதிபதிகள் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள், தானாக முன்வந்து வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் உயிரிழந்த கைதிகளின் நெருங்கிய உறவினரை கண்டறிந்து இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.
மேலும் அனைத்து கைதிகளுக்கும் முறையான மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திறந்தவெளி சிறைச்சாலைகளை அமைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது அத்துடன் சிறைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறாக உயிரிழந்த குழந்தைகளின் விவரங்களை மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை சேகரிக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து குழந்தைகள் இறப்பைத் தடுப்பது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிகளை வரையறுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.