சியோல் நகரில் டைபெற்ற கொரிய ஓபன் பட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து சம்பியன் பட்டம் பெற்றார். இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் பி.வி.சிந்து படைத்துள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மினட்சு மிதானியை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தார்.
இதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுகாரா (Okuhara ) வை எதிர்கொண்ட சிந்து 22-20,11-21,21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கொரிய ஓபன் பட்மிண்டன் சம்பியன் கிண்ணத்தினை வென்றுள்ளார். உலகக் கோப்பை போட்டியில் ஓகுகாராவிடம் சிந்து தோற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#கொரிய ஓபன்
பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டிக்கு பி.வி. சிந்து முன்னேற்றம்
: Sep 16, 2017 @ 04:53
கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். காலிறுதிப் போட்டியின் போது பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த மினாட்சு மிடானியை எதிர் கொண்டு 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
இந்தநிலையில் அரையிறுதிப் போட்டியில் சீனாவை சேர்ந்த பிங் ஜியாவை எதிர்கொண்ட பி.வி. சிந்து 2-1 என வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.