180
நைஜர் ஆற்றில் பயணம் செய்த படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் கயா மற்றும் நைஜர் நாடுகளின் எல்லையில் இருந்து புறப்பட்டு நைஜீரியாவுக்கு வந்த வேளை குறித்த படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான குறித்த படகில் 150 பயணிகளுடன் வர்த்தக பொருட்களும் ஏற்றப்பட்டிருந்ததாகவும் மேலதிகமாக பாரம் ஏற்றியதன் காரணமாகவே படகு விபத்துக்குள்ளதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன ஏனையோரை தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love