பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக முறைப்பாடு தெவித்த டிஐஜி ரூபாவுக்கு கர்நாடக அரசு ஜனாதிபதி விருது வழங்கி கெளரவித்துள்ளது.
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு யோகா செய்வதற்கு, சமைப்பதற்கு, பார்க்க வருபவர்களை சந்திப்பதற்கு என தனி அறைகள், சிறப்புச் சாப்பாடு, உள்ளிட்ட பல சலுகை அளிக்கபப்ட்டதாக டிஐஜி ரூபா ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார். அதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார். இது, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, சசிகலாவுக்கு விதிகளை மீறி வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் குறித்த விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ரூபா பெங்களூர் நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து இப்பிரச்சனை இன்றும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில அரசு டி.ஐ.ஜி ரூபாவுக்கு, ஜனாதிபதி விருது வழங்கியுள்ளது.பெங்களூரில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர், ரூபாவிற்கு ஜனாதிபதி விருது வழங்கினார்.