லண்டன் நிலக்கீழ் புகையிரத குண்டுவெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேல்ஸ் பகுதியில் 25 வயது டைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீவிரவாத எதிர்ப்பு படையின் தளபதி டீன் ஹைடன் கூறுகையில், சுரங்க புகையிரத வெடி விபத்து தொடர்பாக 4 இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், இன்னும் சில தினங்களில் தேடுதல் பணி முடிவடைந்து விடும் எனவும், இதன் பின் வெடி விபத்து குறித்து முழு விவரமும் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த வெடிவிபத்தில் 22 பயணிகள்; காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் புகையிரத நிலையக் குண்டுவெடிப்பு மற்றும் ஒருவர் கைது:-
லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு லண்டனில் கௌன்சிலோ பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ள இவருக்கு வயது 21 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
30 பேர் காயமடைந்த இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்தகாவல்துறையினர் , டோவர் துறைமுகப் பகுதியில் 18 வயதுடைய இளைஞர் ஒருவரை ஏற்கெனவே கைதுசெய்துள்ளனர். இந்நிலையில், இரண்டாவது சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.