இந்திய மத்திய, மாநில அரச பாடசாலைப் பாடப்புத்தகங்களில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக அறிவுரைகள் இடம்பெறுமாறு தேசிய கல்வி ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
பாடசாலைகளில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் இது தொடர்பாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
இதனையடுத்து குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சு கேட்டுக்கொண்டதின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
ஏதிர்வரும் காலங்களில் இந்திய மத்திய, மாநில அரசு பாடசாலைப் பாடப்புத்தகங்களின் கடைசி பக்க அட்டையின் உட்பக்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக எது நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பது பற்றிய அறிவுரைகள் சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் கட்டாயம் இடம்பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இதுபோன்ற நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்தும் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும் எனவும்இதுபற்றி ஆசிரியர்களும், பெற்றோரும் இது பற்றி அறிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.