குண்டர் சட்ட நடவடிக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். திருமுருகன் காந்தி மெரினாவில்; கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை கண்டித்து நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்ததனை தொடர்ந்து காவல்துறை அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக தெரிவித்து திருமுருகன் காந்தி உட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி, தனது விடுதலைக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை முழு உத்வேகத்துடன் முன்னெடுப்பதாகவும், மாணவர்களின் எதிர்பார்ப்பை வெல்லும் வகையில் போராட்டத்தை ஒருங்கிணைப்பதாகவும் தெரிவித்தார்.
திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து:-
Sep 19, 2017 @ 05:41
திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து உயர்நீதிமன்றம் செய்துள்ளது. திருமுருகன் காந்தி மெரினாவில்; கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை கண்டித்து நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்ததனை தொடர்ந்து காவல்துறை அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக தெரிவித்து திருமுருகன் காந்தி உட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.