192
புதிய இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அனுமதி வழங்கியுள்ளார். கிரகம் லெப்ரோயின் தலைமையிலான ஐவர் அடங்கிய இந்தக் குழுவுக்கு இன்றையதினம் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில் கிரகம் லெப்ரோவுடன் அசங்க குருசிங்க, காமினி விக்ரமசிங்க, ஜெரி வவ்டர்ஸ் மற்றும் சஜித் பிரணாந்து ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவே எதிர்வரும் பாகிஸ்தானுடனான தொடருக்கான இலங்கை அணியை தேர்வு செய்யவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love