கிளிநொச்சி பூநகரி கடற்றொழிலாளா்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாது நீடித்து செல்கின்றமை கவலையளிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்குமா பொது நோக்கு மண்டபத்தில் கடற்றொழிலாளா் சமாசத் தலைவா் பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்
அவா் மேலும் தெரிவிக்கையில்
கடற்றொழிலாளா்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றாh்கள். இந்திய இழுவைப் படகுகளினாலும், இலங்கையில் உள்ள ஒரு சில இழுவைப்படகுகளினாலும் பூநகரி பிரதேச கடற்றொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. முக்கியமாக வறிய சிறுதொழில் மீனவா்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்
இழுவைப்படகு தொழில் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கின்ற போதும் அதனை தடுத்து நிறுத்த அதிகார தரப்பினர் எவரும் முன்வருவதாக இல்லை. வசதியுள்ள ஒரு சிலருக்காக ஆயிரக்கணக்கான சிறுதொழில் மீனவா்கள் பாதிக்கப்படுவதனை எவரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலைமை எமது சமூகத்தின் ஒவ்வொரு விடயத்திலும் காணப்படுகிறது. இதனை மாற்றியமைக்க வேண்டும் எனத் தெரிவித்த அவா் எனவேதான் நாம் சமத்துவம் சமூக நீதியுள்ள பலமிக்க தமிழ்த்தேசியத்தை இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றோம் . இதுவே அர்த்தமுள்ள ஜக்கியத்தை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்
அரசியல் அமைப்பின் ஊடாக சமத்துவம் சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்கள் , அரசியல் கைதிகளின் விடுதலை, மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுதல், வாழ்வாதாரம், என மக்கள் முகம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்துசெல்ல முடியாது அவற்றுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் . எனவே நாம் தொடர்ந்தும் பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நின்று எப்போதும் போன்று குரல் கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருவோம் எனவும் தெரிவித்தார்