குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அபாசி (Shahid Khaqan Abb ) க்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இரு நாடுகளினதும் தலைவர்களும் நியூயோர்க்கில் வைத்து சந்தித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான மிக வலுவான உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேலும் அதிகரித்துக் கொள்ளவும் வலுப்படுத்திக்கொள்ளவும் நாடுகளின் தலைவர்கள் இணங்கியுள்ளனர். இலங்கை சவால்களை எதிர்நோக்கிய தருணங்களில் பாகிஸ்தான் வழங்கும் உதவிகளுக்காக நன்றி பாராட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கை தமக்கு மிகவும் முக்கியமான நாடு என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். பிராந்திய வலயத்தில் முக்கிய வகிபாகத்தை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.