ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பான தீர்ப்பு திகதி இன்று அறிவிக்கப்படவுள்ளது
Sep 20, 2017 @ 02:43
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு தொடர்பான தீர்ப்பு திகதி இன்றையதினம் சிபிஐ நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது. முன்னைய ஆட்சியின்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் 1லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபா இழப்பீடு அரசாங்கத்து ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தணிக்கை குழு அறிக்கை தெரிவித்pருந்தது.
இது தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக நாடாளுமன்ற கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகாலமாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்புத் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தீர்ப்பு திகதி இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், தங்கள் தரப்பு இறுதி விளக்கத்தை தாக்கல் செய்ய இன்று வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.