இந்த நாட்டில் தொடரும் இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும் எனவும் எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்த அவர் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
அம்பாறை, திருக்கோவில், சாகாமம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில், ; கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அந்தச் சந்தர்ப்பத்தில் சம்பந்தன், நீலம்திருச்செல்வம் ஆகியோர் பாரிய பங்களிப்புகளை வழங்கியிருந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 17 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒரு புதிய யாப்பு சீர்திருத்தத்தை வரைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதெனவும் இதனூடாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளர்h.