குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவினை தனது கணக்குவழக்குகளை முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள ஐரோப்பிய ஓன்றியம் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளிற்கான ஐரோப்பிய ஓன்றிய பிரதிநிதி மைக்கல் பார்னியர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். முக்கிய விடயங்கள் குறி;த்த பிரித்தானியாவின் அணுகுமுறையில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார்.
பிரித்தானியாவுக்கு இன்னமும் ஓருவருடமே உள்ளது என தெரிவித்துள்ள அவர் பிரித்தானியா உரிய முறையில் உடன்படிக்கையொன்றுடன் வெளியேறுமா என கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து விவாகரத்து செய்வதற்கான கொடுப்பனவு, ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளின் உரிமைகள், மற்றும் அயர்லாந்து விவகாரம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களிற்கு தீர்வை காணவேண்டியுள்ளது எனவும் மைக்கல் பார்னியர் தெரிவித்துள்ளார்
முதல்கட்ட பேச்சுவார்த்தைகளில் முக்கிய விவகாரங்களி;ல் ஏன் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் பிரித்தானியாவிடமிருந்து தெளிவான பதில்களிற்காக காத்திருக்கின்றோம் எனவும் நாளை பிரித்தானியா பிரதமர் இத்தாலியில் ஆற்றவுள்ள உரையை உன்னிப்பாக அவதானிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.