193
ஜம்மு-காஷ்மீரின் பானிஹால் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பானிஹால் பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டையில் மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பகுதியில் பதுங்கி இருந்த இரண்டு தீவிரவாதிகள் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீவிரவாதிகள் அண்மையில் துணை ராணுவ படையினர் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love