குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரை நாய் குரைப்பதற்கு நிகரானது என வடகொரிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். வடகொரியாவை முற்று முழுதாக அழித்துவிடப் போவதாக ட்ராம்ப், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ட்ராம்பின் உரையானது நாய் குரைப்பதற்கு நிகரானது என வடகொரிய வெளிவிவகார அமைச்சர் றி ஜங் கோ ( Ri Yong-ho )குற்றம் சுமத்தியுள்ளார். நாய் குரைத்தாலும் ஊர்வலம் செல்லும் என பழமொழியுண்டு எனவும், நாயைப் போன்று குரைத்து வடகொரியாவை ட்ராம்ப் எச்சரிக்கை முயற்சித்தால் அது வெறும் கனவு மட்டுமேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.