குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரோஹினிய முஸ்லிம்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகை தடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் பௌத்த தரப்புக்கள் குறித்த படகில் ரோஹினிய முஸ்லிம்களுக்கு நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதனை தடுக்க முயற்சித்துள்ளனர்.
பெற்றோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசி படகு ராகீன் மாநிலத்திற்கு செல்வதனை தடுக்கும் வகையில் பௌத்த தரப்பினர் செயற்பட்டுள்ளனர். படகினை தடுக்க முயற்சித்தவர்களை எச்சரிக்கும் வகையில் மியன்மார் காவல்துறையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து அவர்களை அந்த இடத்தை விட்டு கலைத்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.