குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளோபல் தமிழ் போராம் அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புலம்பெயர் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும் அருட்தந்தை இமானுவெல் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்தந்தை இமானுவெலை சந்திக்க கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்கத் தூதுவர் கேசப் தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கத்தினால்கு;ளோபல் தமிழ் போராம் உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக அருட்தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டதனைத் தொடர்ந்து அவர் 1997ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.