கின்னஸ் சாதனை மேற்கொள்ளும் நோக்குடன் கண்டியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்காக 250 மாணவர்களை மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சேலையை ஏந்துவதற்காக, தங்களுடைய விருப்பத்தின் பேரிலேயே, மாணவ, மாணவிகளைப் பயன்படுத்தியதாக, மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கல்வித் திணைக்கள அதிகாரிகள் சேலையை தாங்கிய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கு சென்ற போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த , மாணவர்களின் பெற்றோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கின்னஸ் சாதனையை நிலைநாட்ட முனைந்த மாணவி குறித்த பாடசாலையில் பழைய மாணவி எனும் காரணத்தினால் அவருக்கு உதவி வழங்கும் பொருட்டே இவ்வாறு நந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கின்னஸ் சாதனைக்காக திருமண நிகழ்வில் 250 மாணவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை
Sep 22, 2017 @ 09:01
கின்னஸ் சாதனை மேற்கொள்ளும் நோக்குடன் கண்டியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்காக 250 மாணவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. கின்னஸ் சாதனைக்காக குறித்த திருமண நிகழ்வின் போது 250 மாணவர்கள் வரை பல அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் கல்வியதிகாரிகளுடன் தற்போது கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
எந்தவொரு நடவடிக்கைக்காகவும் பாடசாலை மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு துன்புறுத்தல்களை எதிர்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிகார சபை தெரிவித்துள்ளது.
கின்னஸ் சாதனைக்காக மணமகள் 3.2 கி.மீ. நீளத்திற்கு ஒசரி சேலையை அணிந்து முயற்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது