குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலத்தில் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியில் வசதியான மலசலக் கூட்டங்கள் அமைக்கப்பட்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் மாணவா்கள் உள்ளனா் என பெற்றோரும், கல்விச் சமூகமும் கவலை தெரிவித்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது
கிளிநொச்சியில் நகரின் மத்தியில் அமைந்துள்ள மத்திய ஆரம்ப வித்தியாலத்தின் காணியின் ஒரு பகுதியில் ஜந்து குடும்பங்கள் வசிக்கின்றனா். இவா்களுக்கு கிளிநொச்சியில் நகருக்குட்பட்ட இரணைமடுச் சந்திருக்கருகில் இரண்டு பரப்பு வீதம் பெறுமதிமிக்க காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
சொந்தமாக வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிக்கு நான்கு குடும்பங்கள் செல்ல தயாராக அங்கு வீடுகள் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிலையில் வெதுப்பகம் ஒன்றை நடத்திவரும் ஒருவா் மாத்திரமே பாடசாலைக் காணியை விட்டுச் செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றாh்.
இதனால் குறித்த பகுதியில் பாடசாலைக்கு அமைக்கப்பட்டுள்ள மலசலக் கூடத்தை அங்கு கல்வி கற்கும் 416 சிறுவா்களும், 364 சிறுமிகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த பாடசாலை கல்விச் சமூகம் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினா், முன்னாள் கல்வி அமைச்சர் உள்ளிட்ட பலரின் கவனத்திற்கும் கொண்டும் சென்றும் இதுவரை எவ்வித பயனும் ஏற்படவில்லை என பாடசாலையின் கல்விச் சமூகம் கவலை தெரிவித்துள்ளது.
எனவே 780 மாணவா்களி்ன் நலன்களை கருத்தில் கொண்டு குறித்த பாடசாலை காணியிலிருந்து மாற்றுக் காணிக்கு செல்ல மறுப்புத் தெரிவித்து வரும் ஒருவருக்கு எதிராக பிரதேச செயலாளா் மற்றும் மாவட்ட அரச அதிபா் ஆகியோர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பாடசாலை சமூகம் கோரியுள்ளது.