195
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸவின் பாட்டியான டெய்சி பொரஸ்டுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சமூகமளித்து வாக்குமூலமளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்றையதினம் உத்தரவிட்டுள்ளார்
தெஹிவளையில் கொள்வனவு செய்யப்பட்ட சொகுசு பங்களா தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
யோஷித ராஜபக்ஸ குறித்த பங்களாவை தனது பாட்டியின் பெயரில் வாங்கினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டிந்த வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Spread the love