உலகம் பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – 4ஆவது முறையாக Angela Merkel ஆட்சியை கைப்பற்றினார்:-

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.

598 உறுப்பினர்களைக் கொண்ட ஜெர்மனி நாடாளுமன்றத்திற்கு, கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் போட்டியிட்டனர். இவர்கள் தவிர இன்னும் ஐந்து பேர் தேர்தல் களத்தில் இருந்தனர்.

வாக்குப்பதிவுக்கு பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பில் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் நான்காவது முறையாக அதிபராக பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33% சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன்படி 246 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி 20.5 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதன்படி 153 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுள்ளது.

எனினும் Jorg Meuthen jyikapyhd AFD கட்சி 12.6 வீத வாக்குகளைப் பெற்று 94 ஆசனங்களைப்பெற்று ஜேர்மன் அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வெற்றி குறித்து ஏஞ்சலா மெர்கல் கூறுகையில், இதனைவிட அதிக சதவீதம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனாலும், தேர்தலில் வெற்றி பெற்றது மிகுந்த சந்தோஷமே எனத் தெரிவித்துள்ளார்.

4ஆவது முறையாக Angela Merkel ஆட்சியை கைப்பற்றுவார் ஆனால் இதுவரை பெற்ற வெற்றிகளில் மிக மோசமான வெற்றியாகலாம்:-

 ஜெர்மனியின் சான்சலர் Angela Merkel  நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Angela Merkelலின்  கன்சர்வேட்டிவ் கூட்டணியான CDU/CSU 32.5% வாக்குகளைப் பெற்று, ஜெர்மனி நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக தொடந்து நீடிக்கும் என ARD கருத்துக்கணிக்கு தெரிவித்துள்ளது.

அவரது முன்னாள் கூட்டணிக் கட்சியான SPD 20%  வாக்குகளைப்  பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக அமரப் போகிறது. இந்நிலையில், வலதுசாரி தேசியவாத கட்சியும், முஸ்லிம் விரோத கட்சியுமான AFD 13.5%  வாக்குகளைப் பெற்று, ஜெர்மனியின் மூன்றாவது வலுவான கட்சியாக உருவெடுத்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கட்சி சுமார் 88-89 இடங்களில் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன.

ஆதரவாளர்களிடம் பேசிய Angela Merkel, “சிறந்த முடிவை” எதிர்பார்த்ததாகக் கூறினார், மேலும் “அசாதாரண சவால்கள்” குறித்தும் பேசினார். AFD  கட்சிக்கு வாக்களித்தவர்களின் “கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்” குறித்தும் தான் கேட்கவிருப்பதாக அவர் கூறினார்.

கருத்துக் கணிப்பில் எடுப்பில் வெளியான முடிவுகளை விட AFD கட்சி தற்போது சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் வலதுசாரி கட்சியான AFD  கட்சி முதல் முறையாக ஜெர்மனி நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளது.

ஜெர்மனி ஒப்பிடமுடியாத,”அரசியல் நிலநடுக்கத்தை” எதிர்கொண்டுள்ளதாக வலதுசாரி கட்சியின் தலைவரான ஃப்ராக்கே பெட்ரி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Angela Merkel  தற்போது புதிய கூட்டணியை தேட வேண்டியதிருக்கும். இதற்கான பணிகள் முடிய சில மாதங்கள் ஆகலாம். நான்காவது முறையாக மெர்கல் ஆட்சியைப் பிடித்தாலும்,, இதுவரை பெற்ற வெற்றிகளில் மிக மோசமான வெற்றியாக இது பார்க்கப்படுவதாக பிபிசி பெர்லின் செய்தியாளர் ஜென்னி ஹில் கூறுகிறார்.

பெருமளவிலான குடியேறிகளை நாட்டுக்குள் அனுமதித்ததற்காக அவர் தண்டிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், Angela Merkelலின் பிரசாரக் குழு, இதை மிகவும் தாமதமாகவே உணர்ந்ததாகவும் கூறுகிறார். வாக்காளர்கள் தனக்கு ஆதரவாகத் திரள வேண்டும் என்று மெர்கல் கேட்டுக் கொண்டாலும் அது நடக்கவில்லை என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், எஃப்டிபி மற்றும் கிரீன்ஸ் ஆகிய இரு கட்சிகளுடன் மெர்கல் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், தங்கள் கட்சிக்கும் மெர்கல் கூட்டணி மற்றும் AFD  கட்சிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள் இருப்பதாக கிரீன் கட்சியின் மூத்த தலைவர் விர்ஃபிரிட் ரெட்ஸ்மென் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், யாராவது ஒருவர் ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

BBC

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.