ஈராக்கில் வசிக்கும் குர்து இனமக்களின் தனி நாடு கோரிக்கையை தொடர்ந்து இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 92 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர் என குர்திஷ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க கோரி பிகேகே எனப்படும் குர்துக்கள் தொழிலாளர் கட்சியின,ர் ஆயுதமேந்திய போராட்டம் நடத்திவருகின்றனர். எனினும் குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து விட்ட நிலையில் தனி நாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
இத்ததகைய ஒரு சூழலில் கடந்த திங்கட்கிழமை பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 92 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர் என குர்திஷ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பின் முடிவுகள், தனி நாடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு அழுத்தம் கொடுக்கும் என குர்திஷ் அமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி, குர்திஸ்தான் பிராந்திய அரசு பொதுவாக்கெடுப்பு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவற்றை வெளியிடக்கூடாது எனவும் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் குர்து இனமக்களின் தனி நாட்டு கோரிக்கை தொடர்பான வாக்கெடுப்பு ஆரம்பம்
Sep 25, 2017 @ 07:42
ஈராக்கில் வசிக்கும் குர்து இனமக்களின் தனி நாடு கோரிக்கையை தொடர்ந்து இன்று ஈராக்கின் எதிர்ப்பையும் மீறி பொது வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க கோரி பிகேகே எனப்படும் குர்துக்கள் தொழிலாளர் கட்சியின,ர் ஆயுதமேந்திய போராட்டம் நடத்திவருகின்றனர்.
எனினும் குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து விட்ட நிலையில் தனி நாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்துள்ளனர். மேலும்;, அவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கான தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனி நாடு கோரிக்கைக்கான ஆதரவு பெருகி வருகிறது.
இத்ததகைய ஒரு கு10ழலில் இன்று பொதுவாக்கெடுப்பு நடைபெறுகின்றது. ஈராக் குர்துக்களின் முடிவுக்கு துருக்கியில் வசித்துவரும் சிறுபான்மை குர்துக்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் இது சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகின்றது.