மியான்மரின் ரகைன் மாகாணத்தில் ஒரே இடத்தில் குவியலாக புதைக்கப்பட்ட இந்து மக்களின் சடலங்கள் கொண்ட கல்லறை கண்டறியப்பட்டுள்ளதாக மியான்மர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கல்லறையில் காணப்பட்ட 28 சடலங்களில் பெண்களின் சடலங்கள் அதிகமாக இருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலங்கள் அனைத்தும் இந்து சமூகத்தினருடையது எனவும் இவர்களை ரோஹிஞ்சா தீவிரவாதிகள் கொன்று புதைத்திருக்கலாம் எனவும் மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. மியான்மரில், ரகைன் பிராந்தியத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் கூறும் தகவல்உறுதிப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காவலரண்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதனைத் தொடர்ந்து மியான்மர் ராணுவம் எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இதன்காரணமாக நான்கு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பங்களாதேசில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.