குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து உடன்படிக்கைகள் எதனையும் செய்துகொள்ளாமல் பிரிந்து செல்லும் பட்சத்தில் ஐரோப்பிய ஓன்றியத்திற்கே பாதிப்பு ஏற்படும் எனவும் பிரித்தானியாவினை விட ஐரோப்பிய ஓன்றியம் இரு மடங்கு வேலைவாய்ப்புகளை இழக்கும் எனவும் உலகின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஓன்றான பெல்ஜியத்தின் லெயுவென் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
2019 மார்ச் 29 ம் திகதிக்கு முன்னர் ஐரோப்பிய ஓன்றியமும் பிரித்தானியாவும்; விவகாரத்து தொடர்பிலான உடன்படிக்கைக்கு வராவிட்டால் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்தின் ஏற்றுமதிகள் இறக்குமதிகளிற்கு வரிவிதிக்கும் என பெல்ஜியத்தின் லெயுவென் பல்கலைழகம் தெரிவித்துள்ளது.
பொருட்கள் சேவைகளிற்கான வரிகள் காரணமாக 27 ஐரோப்பிய ஓன்றிய நாடுகளும் சுமார்1.209 மில்லியன் வேiவாய்ப்புகளை இழக்கவேண்டியிருக்கும் எனவும் பெல்ஜியம் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.