குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தியாக தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நல்லூர் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் இடம்பெற்றது. அதேவேளை முன்னாள் போராளி ஒருவர் கைதடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்திற்கு தூக்கு காவடி எடுத்து வந்திருந்தார்.
அதேவேளை இன்றைய நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , ஈ. சரவணபவன் , ஆகியோரும் வடமாகாண சபை உறுப்பினர்கள் , ஜனநாயக போராளிகள் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி , பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.