177
இந்திய மத்திய அரசு தேசிய விருது கொடுத்தால் அதைவாங்க மாட்டேன் என்று ‘கருப்பன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார். பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றபோதே நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு தெரிவித்தார்.மத்திய அரசு தேசிய விருதுக் கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று கூறிய அவர் ஏனென்றால் நாம் நசுக்கப்பட்டுக் கொண்டுத்தான் இருக்கிறோம். ரயில் டிக்கெட்டில் நமது மொழியை எடுத்துவிட்டார்கள். அதுவே பெரிய வருத்தம் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், நிறைய கோபம் வருகிறது. நாம் உணர்ச்சிவசப்படுதால் நிறையப் பேர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்படுதலைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் என்றும் அவர் கூறினார்.
Spread the love