குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பினை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியிருந்தனர். ஈராக், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளது கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுவாக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வி.உருத்திரகுமாரன் குர்திஷ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய கருத்துரை ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழீழம் உள்ளடங்கியதான அனைத்து தீர்வுத் திட்டங்களையும் உள்ளடக்கி, தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து, அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் ஈழத் தமிழ்மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே பிரதான விடயமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடையேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் இப்பொது வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் குர்திஷ்தான் மக்களது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கையினையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.