நல்லாட்சி அரசு கொண்டுவந்த சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய மாகாண சபை தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாகசிறுபான்மையின அரசியல் வாதிகள் பெருமை பேசுவதை பார்க்கும் போது நகைப்புக்குரியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…
இந்த நல்லாட்சி அரசானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் சிறுபான்மையின மக்கள் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனவாதிகளுடன் இணைந்து சிறுபான்மையின மக்களுக்கு துரோகமிழைக்கின்றார் என்ற மிகப் பெரும் குற்றச் சாட்டை அவர் மீது முன் வைத்திருந்தனர். அப்படியானால்அவர்கள் கொண்டுவந்த நல்லாட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் நடந்தேறிய இனவாத செயற்பாடுகளை நிறுத்தும் வகையிலும் அதற்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும்வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.
இவர்கள் கொண்டு வந்துள்ள அரசானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் நடைபெற்ற எந்த வித இனவாத செயற்பாடுகளை நிறுத்தவுமில்லை அதற்கு தீர்வுபெற்றுக்கொடுக்க்கவுமில்லை. அதற்கு மாறாக இவ்வரசே முன்னின்று இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. அப்படியானால் சிறுபான்மையின அரசியல் வாதிகள் எந்தநோக்கத்தை பிரதானமாக முன் வைத்து கொண்டு வந்தார்களோ அதற்கு இவ் ஆட்சி எதனையும் செய்யவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் இனவாத செயற்பாடுகளை சில இனவாத அமைப்புக்கள் தான் முன்னெடுத்திருந்தன.தற்போது சிறுபான்மையின மக்களின்பிரதிநிதித்துவங்களை குறைக்கும் வகையிலான தேர்தல் மாற்றத்தை இவ்வரசே முன்னின்று செய்து கொண்டிருக்கின்றது. இந்த அரசு கொண்டுவந்த செயற்பாடு சிறுபான்மையின மக்களை மிகவும்பாதிக்கும் வகையில் அமைந்திருந்தும், அதனை முன்னிறுத்தியே கொண்டுவரப்பட்டது என்பதை சிறுபான்மையின அரசியல் வாதிகள் நன்கு அறிந்திருந்தும், இவ்வரசை விமர்சிக்க செல்லவில்லை. மாறாக அதில் இருந்த பாதிப்புக்களை குறைந்துவிட்டதாக பெருமை பேசுகின்றனர்.
நன்றாக சிந்தித்துப் பாருங்கள், ஆபத்தை குறைத்தல் என்பது எப்படி தீர்வாகும்? இதற்குத் தான் இந் நல்லாட்சியை கொண்டு வந்தார்களா? ஆட்சியாளர்கள் சிறுபான்மையின மக்களை பாதிக்கும்வகையிலான சட்டத்தை நிறைவேற்ற விரும்பினால், நூறுவீதம் பாதிப்புக்களை உள்ளடக்கி சட்டத்தை கொண்டு வந்து, அதில் சிறு மாற்றங்களை செய்து, ஆபத்தை குறைத்தால் சிறுபான்மையினஅரசியல் வாதிகள் ஏற்றுக்கொண்டு விடுவார்களா? முதலில் இது சாதூரியமான பேச்சாகுமா? இக் கருத்தை இந் நல்லாட்சியை உருவாக்குவதில் மிகவும் பங்களிப்புச் செய்தவரும் சிறுபான்மையினமக்களின் அதிக நன் மதிப்பையும் பெற்ற அமைச்சர் மனோ கணேசன் கூறியிருப்பதானது, அவரின் முகத் திரை படிப் படியாக கிழிய ஆரம்பிப்பதாக கொள்ளலாம். இதுவும் முன்னாள் ஜனாதிபதிமஹிந்தவின் சதிதான் எனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.