322
நான்காவது முறையாகவும் ஜேர்மன் அதிபராக தேர்தலில் வெற்றிபெற்றிக்கும் ஜேர்மன் அதிபர் என்ஜலா மார்க்கலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைவராக நான்காவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் உங்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இந்த தேர்தல் வெற்றி உங்களது சிறந்த தலைமைத்துவத்தையும் ஜேர்மன் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love