கூர்காலாந்து தனி மாநில போராட்டத்தை கைவிடுவதாக போராட்ட குழு தலைவர் பிமல்குருங் அறிவித்துள்ளார். 104 நாட்கள் நீடித்த இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு கூர்கா இனத்தவர்கள் வசிக்கும் டார்ஜிலிங் பகுதியில் வங்காள மொழி அடிப்படையில் ஆட்சி நடைபெறுகின்றமையினால் டார்ஜிலிங் பகுதியை தனி மாநிலமாக அறிவிக்ககோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் போராட்ட குழு தலைவர் பிமல் குருங் குடன் இந்திய மத்திய அரசு அவரை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்தை நடத்தியிருந்தார்கள்.
இதன்போது கூர்கா லேண்ட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கு வங்க காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள், வழக்குகள் போன்றவற்றை கைவிடுவது, கூர்கா மக்களின் அடிப்படை உரிமைகள் போன்றவற்றில் உடன்பாடு ஏற்பட்டதனைத் தொடர்ந்து போராட்டத்தினை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.