எல்லைகளினூடாக மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடுவது சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையில் காணப்படுகின்ற மனித கடத்தல்கள் மற்றும் ஏனைய குற்றங்களை தடுப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த யோசனை அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.