இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மற்றிஸ் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இதேவேளை அமைச்சர் ஜேம்ஸ் மற்றிஸ் ,இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசியுள்ளார். இந்தநிலையில் பாதுகாப்புத்துறையில் இந்தியா அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதி எடுத்துள்ளன.
இதன்போது, அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்கள், கடலுக்கு மேல் பறக்கும் தானியங்கி விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இரு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
சமீப காலமாக இந்திய-அமெரிக்க பாதுகாப்பு உறவுகள் வளர்ந்து வருகின்றன என்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், ஆனால் படை அனுப்பாது என்றும் இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதியளித்தார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அமெரிக்காவிலிருந்து அமைச்சரவை மட்ட அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு வந்துள்ளது இதுவே முதல் முறை.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவிடம் சுமார் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இராணுவ தளபாடங்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 22 கடல்மேல் ஆய்வு தாக்குதல் நடத்தும் விமானங்களை விற்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. Nயுவுழு கூட்டமைப்பில் இல்லாத ஒரு நாட்டுக்கு அமெரிக்கா முதன்முதலாக இந்த விமாங்களை வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.