குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
துயிலும் இல்லங்கள் துயிலும் இல்லங்களாக இருக்கட்டும். அவற்றை தாவரவியல் பூங்காவகாக மாற்ற வேண்டாம் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 106ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன்போது அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டும் என அண்மையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டிய தேவையில்லை. அவை மாவீரர் துயிலும் இல்லங்களாகவே இருக்கட்டும். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அவை மாவீரர் துயிலுமில்லங்களாக புனரமைப்பு செய்யப்படும். அதனை விடுத்து மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டிய அவசியம் ஒருபோதும் இல்லை.
மேலும் வடமாகாணசபை பல அபிவிருத்தி திட்டங்கள் வருவதற்கு முன்பதாகவே அவை தொடர்பாக அச்சத்தை மக்களிடம் விதைக்கிறது. அதனால் மக்கள் அதனை எதிர்க்கும் நிலை உருவாகின்றது. உதாரணமாக பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல விடயங்களை எங்களால் கூறலாம் என ஆனோல்ட் மேலும் தெரிவித்தார்.