167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க பயணம் செய்த வாகனமே இந்த விபத்தில் சிக்கியுள்ளது. கரன்காவ என்னும் இடத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பயணம் செய்த வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love