குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரிய நிறுவனங்களை மூடுவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய சீனா இவ்வாறு வடகொரிய நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்ப பகுதியில் இந்த நிறுவனங்கள் மூடப்பட உள்ளன. சீன மற்றும் வடகொரிய கூட்டு நிறுவனங்களும் இவ்வாறு மூடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடகொரியா மிகவும் பலம் வாய்ந்த அணுவாயுத பரிசோதனையை செய்ததன் எதிரொலியே இவ்வாறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 11ம் திகதி சீனா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் வடகொரியாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.