குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் ரோஹினிய முஸ்லிம்கள் தங்கியிருக்கும் ராகீனெ மாநிலத்திற்கு செல்வதனை மியன்மார் அதிகாரிகள் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாநிலத்திற்கு ஐக்கிய நாடுகள் அதிகாரிகளும், ராஜதந்திரிகளும் பயணம் செய்வதனை மியன்மார் அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிகாரிகள் குறித்த மாநிலத்திற்கு செல்வதனை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு லட்சம் ரோஹினிய முஸ்லிம்கள், பங்களாதேஸில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் ரோஹினிய முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து ஆராயும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் இந்த பயணத்தினை Nமுற்கொள்ள திட்டமிடிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.