250
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் புகையிலை உற்பத்தி ரத்து செய்யப்படும் என சுகாதார மற்றும் போசாக்கு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். புகையிலை சார் உற்பத்திகளைக் கொண்டு 35, 000 பேர் வரையில் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ளனர் எனவும் இவ்வாறானவர்களுக்கு வேறும் பொருளாதார நலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகையிலை உற்பத்தியை தடுப்பதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக பல நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love