மலையத்தில் காணப்படும் பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஓப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது.
நேற்று கொழுப்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாடப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த ஓப்பந்தம் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித்சந்து அவர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சிக்கும் இடையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் இராதாகிருஸ்ணன் திவாகரன் உதவி இந்திய உயர் ஸ்தானிகர் கல்வி அமைச்சின் பாடசாலைகளின் கட்டட அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி அபேசுந்தர பிரதான கணக்காளர் ஜயசேகர ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து அங்கு கருந்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த பாடசாலை ஒரு மாகாண பாடசாலையாகும் இதற்கான அபிவிருத்திகள் அனைத்தும் மாகாண சபையின் ஊடாக நடைமுறைபடுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.