சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் தொடர்பாக எந்தவித கருத்தை வெளியிட்டாலும் கவனத்தில் கொள்ளப் போவதில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு மற்றும் தீர்மானங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே முன்னெடுத்து வருவதாகவும் விக்னேஸ்வரன் கூறும் வகையில் செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை முதலமைச்சர் பொறுப்பற்ற வகையில் கருத்து வெளியிட்டு வருவதாகவும், அவரின் சில கருத்துக்கள் அடிப்படைவாத முறையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது என தெரிவித்துள்ள பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் முதலமைச்சர் கோரும் வகையில் வடக்கில் பாதுகாப்பு படையினரையோ முகாம்களையோ அகற்ற முடியாது என தெரிவித்தார்.