170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரோஹினிய முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு அருகாமையில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோஹினிய முஸ்லிம்களுக்கு எதிராக போராட்டங்களை நடாத்துவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருகின்ற நிலையில் இந்தப் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் நீதிமன்றில் இந்த உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காலி நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
ரோஹினிய முஸ்லிம்களுக்கு எதிராக, சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.
Spread the love