தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் காஷ்மீர் சுயேச்சை சட்டமன்ற உறுப்பனரான ஷேக் அப்துல் ரஷீத்தை அடுத்த மாதம் 3ம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் மாநாட்டின் தலைவர், கிலானியின் நண்பரும் தொழிலதிபருமான கக்கூர் அகமது, தீவிரவாத அமைப்புகளுக்காக நிதி திரட்டியது உறுதியானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம மேற்கொண்ட விசாரணையில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதில் ஷேக் அப்துல் ரஷீத்துக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ள நிலையிலேயே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.