இந்திய எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையோர கிராமங்கள் மற்றும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில், 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் கொடுத்துள்ளதாகவும், இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்நிறுத்த ஒப்பந்த்தை மீறும் பாகிஸ்தான் ராணுவம், எல்லைப் பகுதியில் உள்ள இந்திய ராணுவம் மற்றும் குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.