அமெரிக்காவில் கசினோ இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நேற்றிரவு இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் (Las Vegas ) நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் குறைந்தது 200 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டவர் ஒருவர் அமெரிக்கர் எனவும் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருபதுக்குக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Oct 2, 2017 @ 08:28
அமெரிக்காவில் கசினோ இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நேற்றிரவு இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருபதுக்குக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் வேகஸ் ( Las Vegas ) நகரில் உள்ள மாண்டலே பே விடுதி அருகே இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் குறைந்தது 100 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதியின் மேல் மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக அடையாளம் காணப்பட்ட உள்ளூர்வாசியான சந்தேக நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த இந்த இடத்தை தவிர்க்குமாறு மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.