உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள சுற்றுலாப் பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகிய ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹால் இடம்பெறவில்லை.
அதேநேரத்தில் உத்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளதுடன் கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மொகலாய மன்னர் ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜின் நினைவாகவும் தங்களின் காதலின் சின்னமாகவும் தாஜ்மஹாலை கட்டினார். புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ்மஹால் முழுவதும் வெள்ளை சலவைக்கல்லால் கட்டப்பட்டது. தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை